ETV Bharat / bharat

போதை பொருள் வழக்கு: நடிகை சஞ்சனா, ராகினியின் போலீஸ் கஸ்டடி இன்றுடன் நிறைவு! - பொதை பொருள் வழக்கு

பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனா, ராகினி ஆகியோரின் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், அதை நீட்டிக்க சிசிபி அலுவலர்கள் தரப்பில் முறையிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

drugdeugdrug
drugdeug
author img

By

Published : Sep 14, 2020, 4:58 AM IST

போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு தொடா்பாக கன்னடத் திரைக்கலைஞா்கள் உள்ளிட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில், ராகுல் ஷெட்டி, ரவிசங்கா், விரேன் கன்னா, நடிகை ராகினி துவிவேதி, நடிகை சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பல பெரும் புள்ளிகள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க செப்டம்பர் 14ஆம் தேதிவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைகிறது.

சஞ்சனா, ராகினி ஆகிய இருவரையும் உயர் அலுவலர்கள் விசாரணை நடத்த செல்கையில், கை வலி அல்லது காய்ச்சல் போன்றவற்றை சொல்லி காலம் தாழ்த்தியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சிசிபி தரப்பில் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை விசாரணை முடியாதபட்சத்தில், காவலை நீட்டிக்க சிசிபி அலுவலர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.