கடந்த வெள்ளிக்கிழமை திரிபுரா சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஏடிஎம் இயந்திரத்தை ஹேக் செய்த வழக்கின் விசாரணைக் கைதி சுசந்த கோஷின் மரணம் குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அச்சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முதலமைச்சர் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து நேற்று சட்டப்பேரவையில், விளக்கம் கேட்க முயன்றபோது குறுக்கிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ராய் பர்மன், ”இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
எனவே, மேற்கூறிய விவரங்கள் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதிக்கக் கூடாது” என்று சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற சபாநாயகரும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால் அதுகுறித்து அதிகம் விவாதிக்க வேண்டாம் என்றார். விசாரணைக் கைதி மரணம் குறித்த விளக்கத்தைப் பெற எதிர்க்கட்சி உறுப்பினர்களை அனுமதிக்காத காரணத்தால் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: 'உயிர்களை அழிக்கும் பாஜக நிர்வாகம்' - சீதாராம் யெச்சூரி சாடல்