பாஜக தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கூறஇய அவர், "தற்போது நாங்கள் நம்பிக்கை வாக்குகெடுப்பு நடத்த கோரவில்லை. இது ஒரு ஊழல் நிறைந்த அரசாங்கம்.
கரோனா வைரஸ் நெருக்கடியில் தவறான நிர்வாகத்தை செய்ததன் மூலம், ராஜஸ்தானில் காங்கிரஸ் பலவீனமான அரசாக மாறியுள்ளது. இந்த அரசாங்கம் மாநில மக்களின் நலனுக்காக விலகிச் செல்ல வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் அடித்தளம் பலவீனமாக உள்ளது. காங்கிரஸ், தங்கள் தலைவர்கள் ஒன்றுப்பட்டுள்ளனர் என்று கூறிவருகிறது, ஆனால் கட்சிக்குள் அதிகளவில் உள் சச்சரவுகள் உள்ளன என்பது தெளிவாகிறது.
சச்சின் பைலட் அவமானத்தை எதிர்கொண்டதால், அவர் காங்கிரஸிலிருந்து பிரிந்து செல்ல வேண்டியிருந்தது. தலைவர்களை அவமானப்படுத்துவது காங்கிரசின் பாரம்பரியம். பல ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் சேர, அதை விட்டுவிட வேண்டியிருந்தது.
இதே நிலைதான் ராஜஸ்தானில் சச்சின் பைலட் விஷயத்தில் இருந்தது, அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் புறக்கணிக்கப்பட்டனர், அவமதிக்கப்பட்டனர்.” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில்,, காங்கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் கட்சி மற்றொரு வாய்ப்பை அளிப்பதாகக் ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறினார்.
"நாங்கள் சச்சின் பைலட்டுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கிறோம், செவ்வாய்க்கிழமை சிஎல்பி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். அனைத்து எம்எல்ஏக்களும் வந்து தலைமைக்கு ஒற்றுமையை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
அதற்காக ராஜஸ்தான் மக்கள் வாக்களித்தனர். நாங்கள் அனைவரும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க விரும்புகிறோம்" என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, அகமது படேல், பி சிதம்பரம், கே.சி.வேணுகோபால் ஆகியோர் சச்சின் பைலட்டுடன் பலமுறை பேசியுள்ளனர். இருப்பினும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சி கூட்டத்தில் பைலட் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலத்தின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் இல்லத்தில் திங்கள்கிழமை(ஜூலை 13) நடைபெற்ற சி.எல்.பி கூட்டத்தில், பைலட் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பைலட் தவிர, வேத் சோலங்கி, ராகேஷ் பரிக், முராரி லால் மீனா, ஜே.ஆர்.கதானா, இந்திராஜ் குர்ஜார், கஜேந்திர சிங் ஷக்தாவத், ஹரீஷ் மீனா, தீபேந்திர சிங் சேகாவத், பன்வர் லால் சர்மா, கஜ்ராஜ் கட்டனா, விஜேத்ரா சவுனா, ஹேமராம், விஸ்வேந்திர சிங், முகேஷ் பாக்கர், சுரேஷ் மோடி, வீரேந்திர சவுத்ரி, அமர் சிங் ஜாதவ் ஆகியோரும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கடந்த சில நாள்களாக ராஜஸ்தான் காங்கிரசில் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. எம்.எல்.ஏ.க்களை தன்வசம் ஈர்ப்பதன்மூலம், மாநில அரசை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக கெஹ்லோட் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.