ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் படை வீரராக பணியாற்றியவர் மதன் சிங். இவர் கடந்த சில நாள்களாக தனது குடும்பத்தாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மதன் சிங் தனது துப்பாக்கியை எடுத்து அவரது மனைவியை சுட்டுக்கொன்றார். தொடர்ந்து, தன்னை தானே அவர் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதில், அவர்களது மகள் சம்பவ இட்டத்தில் இல்லாததால், நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.