நாடாளுமன்ற ஜனநாயகத்தை குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகளிடம் இருந்த நீதிமன்ற உத்தரவுகள் காக்க முனைகின்றன. ஆனால், இந்த முயற்சி என்பது தொடர்ந்து ஒரு வழிபாதையாகவே இருக்கிறது.
குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரிக்க 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட, இறுதி தீர்ப்புகளில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இது போன்ற சட்ட தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசியல்வாதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தும் வகையில் ஒரு வாரத்துக்குள் ஒரு செயல்திட்டம் வகுக்கும்படி அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுமக்களின் பிரதிநிதிகளில் பலர் சக்தி வாய்ந்த அரசியல் லாபிகளில் ஈடுபட்டு, தங்கள் மீதான வழக்குகளின் தீர்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இது போன்ற ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கூறிய உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு தடை இருந்தாலும்கூட வழக்குகளை தினசரி விசாரித்து இரண்டு மாதங்களில் இறுதி தீர்ப்பை வழங்கும் நிலையை எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
ஜனநாயக மறுசீரமைப்புக்கான அசோஷியேசனின் தகவலின்படி 2014ஆம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 1,581 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்துள்ளது. இன்றை காலத்தில் சுமார் 4,442 அரசியல்வாதிகள் குற்றவழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். இதில் 2,556 பேர் இப்போதைய நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
1997ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய எந்த ஒரு நபருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் அப்போது சபதம் செய்தன. ஆனால், இப்போது அனைத்துக் கட்சிகளும் கிரிமினல் குற்றவாளிகளை தேர்தலில் நிறுத்துவதில் ஒற்றுமையாக இருந்து வருகின்றன.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எம்.எல்.ஏ அல்லது எம்.பி-க்களை தகுதி இழப்பு செய்வதால் மட்டுமே அரசியலில் குற்றச்செயல்கள் குறைந்துவிடாது என்று கூறியது. தங்கள் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றசாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றுகூறி கட்சி தலைமைகள் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே அரசியல் அமைப்புகளிலும் சீர்திருத்தங்கள் தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதன்படி அரசியல் கட்சிகளுக்காக நீதிமன்றம் ஆறு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர்களை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்தது ஏன் என்று விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
அரசியல் தூய்மை மிக்க வேட்பாளரைவிடவும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளருக்கு இருமடங்கு வெற்றி வாய்ப்புகள் எப்படி கிடைக்கிறது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு கேட்டிருக்கிறது. தார்மீகம் இல்லாத இந்திய அரசியலின் உண்மையைப் பிரதிபலிப்பதாகவே இந்த கருத்து அமைந்திருக்கிறது.
குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படுவது மறுக்கும்பட்சத்தில் இந்த சிக்கல்கள் தவிர்க்கப்பட முடியும். ஆனால், தற்போதுள்ள அரசியல் கட்சிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது. இங்கு குற்றவாளிகள்கூட தங்களது சொந்த அரசியல் கட்சிகளை தொடங்க முடிகிறது.
அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒவ்வொரு சிறிய பின்னணி தகவலும் கவனத்தில் கொள்ளப்படும். அமெரிக்காவின் போர் விமான தளத்தை இடம் மாற்றுகின்றேன் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தம்மால் நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி ஜப்பான் பிரதமர் ஹடோயாமா கடந்த காலத்தில் பதவியை விட்டு விலகினார்.
ஆனால், இங்கே இந்தியாவில் லாலு பிரசாத்யாதவ் போன்றவர்கள் ஊழல் குற்றசாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், சிறையில் இருந்தபடி சில அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் கூட்டணியில் ஈடுபட முடிகிறது. அரசியல் முறைகேடு என்பது அனைத்து குற்றங்களுக்கும் தாய்போன்றது. விழிப்புணர்வுதான் அரசியலில் ஊழல் மற்றும் குற்றமயமாக்கலுக்கு மருந்தாக இருக்கும்.
இதையும் படிங்க: உண்ணாவிரத்தை முடித்த மாநிலங்களவை துணைத் தலைவர்!