ETV Bharat / bharat

நாட்டின் முக்கிய அமைப்புகளின் நம்பகத்தன்மை என்னாவது? - Central Information Commission

நாட்டில், யார் ஆட்சியில் இருந்தாலும், நாட்டின் முக்கிய அமைப்புகளின் தலைமை பதவியில் அமருபவர்களின் பின்னணியில் பெரும் சூத்திரம் அடங்கியிருக்கும். அரசியல் விளையாட்டு இதன் பின்னணியில் இருப்பதைப் பரவலாகக் காண முடியும். சமீபத்தில், மத்திய புலானய்வு ஆணையம் (Central Vigilance Commission)மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் ( Central Information Commission) தலைவர்கள் நியமனத்தில் பரவலாக அதிருப்தி நிலவுகிறது. இவர்களின், நியமனத்தில் முறைகேடுகள் இருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது.

நம்பகத்தன்மை
நம்பகத்தன்மை
author img

By

Published : Mar 10, 2020, 11:51 AM IST

2019 ஜூன் 9ஆம் தேதி தலைமை புலனாய்வு ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து, கே.வி. சௌத்திரி ஓய்வுபெற்றார். அதற்குப் பிறகு, இந்தப் பதவியில் யாரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இந்திய குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த சஞ்சய் கோத்தாரி தற்போது இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்த சுதீர் பார்கவ் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தில் பிமல் ஜூல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆணையங்களுக்கான தலைவர்களை தேர்வு செய்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியலை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு பிரதமர் வலியுறுத்தியும், அது செய்யப்படவில்லை. இது இந்தப் பணி நியமனத்தில் நடந்த முதல் ஆட்சேபனையாக கருதப்படுகிறது .

இரண்டாவதாக, இந்தப் பதவிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்திரி, பல முறை ஆட்சேபனை தெரிவித்தும், மத்திய அரசின் ஆதரவுடன் இந்தப் பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. நீங்கள் என்னதான் நேர்மையான அதிகாரிகள் அடங்கிய பட்டியல் தயாரித்தாலும் அரசு டிக் செய்தவர்கள்தான் நாட்டின் முக்கிய அமைப்புகளின் தலைவர் பதவியில் அமர்வார்கள் என்றால் இப்படியொரு தேர்வுக்குழு தேவையா? என்கிற கேள்வியும் எழுகிறது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரிஷிகுமார் சி.பி.ஐ அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, ஊழல் வழக்குகளை நல்ல முறையில் விசாரிக்க தெரியாதவர் ரிஷி குமார் என்றும் அவர் விசாரித்த ஊழல் வழக்குகளின் அடிப்படையில், இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாகவும் விமர்சனம் எழுந்தது. தங்கள் பதவியின் கண்ணியத்தையும் நேர்மையையும் காப்பாற்றும் அதிகாரிகளை விட அப்படியில்லாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பல காரணங்கள் உள்ளன.

இதனால்தான் தேர்வுமுறைகள் பெரும்பாலும் கேலிக்குள்ளாகின்றன. இது போன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நிலைமையை சீர் செய்ய முயன்றாலும், அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில் நாட்டின் முக்கியமான அமைப்புகளில் சீர்கேடுகள் நிலவுவது பெரும் ஆபத்தில் முடியும். . அரசியலில் ஊழல் மலிவடைய தொடங்கிய காலத்தில் இருந்து இத்தகையை சீர்கேடுகள் உருவாகத் தொடங்கியுள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு, 'ஒருவருக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தால், அவர்கள் நாட்டின் ஏதாவது முக்கிய அமைப்புகள் காக்கத் தொடங்கி விடும். இது நாட்டின் ஒற்றுமை மற்றும் அரசியல் சூழ்ச்சி செய்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது' என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார். யு.பி. ஏ (காங்கிரஸ் கூட்டணி கட்சி) ஆட்சிக் காலத்தில் தேர்தல் ஆணையத் தலைவராக நவீன் சாவ்லா நியமிக்கப்பட்ட போது கடும் சர்ச்சை எழுந்தது குறித்து அனைவருக்கும் தெரியும்.

அப்போதைய, தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, இந்திய குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், 'ஆளும் கட்சியுடன் உள்ள தொடர்பு காரணமாக தவறான செயல்களில் நவீன் சாவ்லா ஈடுபடுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ரகசியத்தகவல்களை அவர்களிடத்தில் சொல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற விஷயத்தை கருத்தில் கொண்டுதான் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாட்டின் சட்ட அமைச்சர் அடங்கிய கொலிஜியம்தான் நாட்டின் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டுமென்று அத்வானி பரிந்துரைத்தார். பிறகு, மன்மோகன் சிங் காலத்தில் நாட்டின் புலனாய்வு அமைப்பின் தலைவராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட, இதுவும் மன்மோகன் அரசுக்கு களங்கமாகவே அமைந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, மத்திய அரசு பணிந்து போக வேண்டியது இருந்தது. தேர்வுக்குழுவில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இரு உறுப்பினர்கள் தாமஸ் மீதான பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

உச்ச நீதிமன்றம் நாட்டின் முக்கிய அமைப்புகளின் தலைவர் பதவிகள் நியமனம் குறித்து தெளிவான தகுதி நிர்ணயத்தை வகுத்திருந்தாலும், நாட்டின் அரசாங்கங்கள் அந்த விதிகளை பின்பற்ற தவறுகின்றன, தார்மீகத்தையும் மீறுகின்றன என்பதை உண்மை.தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு ஆணையம், சி.ஏ.ஜி, மத்திய தகவல் ஆணையம், சி.பி.ஐ போன்ற நாட்டின் முக்கிய அமைப்புகள் மக்கள் நல்வாழ்வை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை.

தேர்தல் ஆணையத்த தவிர மற்ற அனைத்து அமைப்புகளுமே நாட்டிலிருந்து ஊழலை அகற்ற உருவாக்கப்பட்டவை. இத்தகைய முக்கியமான அமைப்புகளில் அழுத்தத்தை எதிர்கொள்ள தெரிந்த நேர்மையான அதிகாரிகள் கையில் இருந்தால், உலகில் அதிகமாக ஊழல்கள் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருக்காது. சி.பி.ஐ இயக்குனராக ரஞ்சித் சின்ஹா இருந்த போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்த வழக்குகளில் கூட பல விதங்களில் மூக்கை நுழைத்த வரலாறு உண்டு.

சமீபத்தில் சி.பி.ஐ தலைவர் அலோக் வர்மா மற்றும் துணைத் தலைவர் அஸ்தானா ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டது சி.பி.ஐ. அமைப்பையே கேலி செய்யும் விதமாக அமைந்தது.இத்தகைய சர்ச்சைகளுக்கு பிறகே , மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள தகவல் ஆணையர்களின் பதவிகளை உடனடியாக அதாவது மூன்று மாதங்களுக்குள் நியமிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும், இந்த ஆணையங்களில் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு நிரப்ப கடும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்தன என்பதும் உண்மை. சொல்லப்போனால், லோக்பால் அமைக்கப்பட்டு 6 வருடங்கள் ஓடி விட்டன.

அரசையோ அதிகாரத்தில் உள்ளவர்களையோ லோக்பால் அமைப்பால் என்ன செய்ய முடிந்தது. இதுவெல்லாம் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தக் கூடியவைத்தானே. நாட்டின் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க சுதந்திரமான அமைப்புகளை உருவாக்குவது குறித்து உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பரிந்துரைத்தது. ஆனால், இந்திய சட்ட ஆணையம்'' அதற்கு வாய்ப்பு இல்லை. ஏகமனதான நியமனங்கள் செய்ய முடியாமல் போகலாம் என்று கருத்து தெரிவித்தது.

இது தேசிய அளவிலான அமைப்புகளின் தலைவர்களை நியமிப்பதில் உள்ள குறைபாடுளை முறைகேடுகளை ஆழமாக சுற்றிக் காட்டியது. பாரபட்சமற்ற விசாரணை அமைப்புகளை செயல்பட வைப்பதில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளுடன் ஒப்பிடக் கூடிய கொள்கை முடிவுகளை இந்தியா எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த அமைப்புகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

இதையும் படிங்க: கொரோனா: கர்நாடகாவில் உயிருடன் புதைக்கப்பட்ட 6 ஆயிரம் கோழிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.