இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவரும், தேசிய கவுன்சிலின் செயலாளருமான பினாய் விஸ்வாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டம் இந்தியாவின் அரசியலமைப்பு, கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது.
மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இவை வேண்டும் என்றே திட்டமிட்டு ஜனநாயகத்தின் மீதும், அரசியலைப்பின் மீதும் மேற்கொள்ள அத்துமீறல் ஆகும். உறுப்பினர்கள் சட்டங்களை ஆராய்ந்து, விவாதம் மேற்கொண்டு வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை; இது அரசியலமைப்பிற்கு எதிரான செயலாகும்.
இது அரசியலமைப்பின் 100 மற்றும் 107 வது பிரிவை மீறுகிறது. மேலும், அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21ஆவது பிரிவுகளை மீறுகிறது. சிபிஐ எம்.பி பினாய் விஸ்வாம், வழக்கறிஞர் ஸ்ரீராம் பரக்கட் மூலம் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ், சிபிஐ மற்றும் பிற கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றன. அண்மையில் இயற்றப்பட்ட இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகளால் பஞ்சாபிலும் பிற மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம் மாநாடு!