அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தகுதி வாய்ந்த ஏலதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமராவதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை தனியார்மயமாக்குவது பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தும், இது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.
மேலும், மத்திய அரசு உடனடியாக மக்கள் விரோத, தேசத்துரோக கொள்கைகளை பின்வாங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.