ETV Bharat / bharat

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கரோனா பரிசோதனை அவசியம்...! - மாநிலங்களவை

டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க கரோனா பரிசோதனை அவசியம் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

covid-test-report-mandatory-to-enter-parliament-during-session
author img

By

Published : Sep 4, 2020, 3:48 PM IST

கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே முதல்முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு முன்னதாக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது செப்.11ஆம் தேதி பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அப்படி செய்ய தவறினால், நாடாளுமன்றத்தின் முகவறையிலேயே அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். அதுவரையிலும் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கேனும் கரோனா பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தாலும், அவருக்கு கரோனா அறிகுறி இருந்தால் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். அதுவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக தங்களது குழு உறுப்பினர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். குடும்பத்தினரில் யாரேனும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனிடையே சனிக்கிழமையன்று மக்களவை செயலகம் சார்பாக கரோனா பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் நாடாளுமன்ற அலுவலர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், நிபுணர்களின் ஆலோசனைப் படியே அனைத்து மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து சக மருத்துவர்கள் கண்டன பேரணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.