கோவிட் 19 மேலாண்மைக்காக ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் முன்னிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி நேற்று (அக்.6) வெளியிட்டார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் டாக்டர் வி.எம்.கடோச் தலைமையிலான இடைநிலைக் குழு நிபுணர்களின் பரிந்துரையின்படி கரோனா தொற்று சிகிச்சைக்கு அளிக்கும் மருத்துவ மேலாண்மை நெறிமுறையில், ஆயுர்வேதா மற்றும் யோகா ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆயுஷ் அமைச்சகம் தேசிய பணிக்குழுவை அமைத்து கரோனா சிகிச்சைக்கான தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறையை தயாரித்தது. 'கோவிட்-19 ஆயுர்வேத மருத்துவத்தின் பங்களிப்பை புரிந்துகொள்ள ஆயுஷ் அமைச்சகம் பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது' என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவ முறைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
-
Commendable effort, which places emphasis on building immunity, remaining healthy and making the fight against COVID-19 stronger. https://t.co/PpUCtqOz6Z
— Narendra Modi (@narendramodi) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Commendable effort, which places emphasis on building immunity, remaining healthy and making the fight against COVID-19 stronger. https://t.co/PpUCtqOz6Z
— Narendra Modi (@narendramodi) October 6, 2020Commendable effort, which places emphasis on building immunity, remaining healthy and making the fight against COVID-19 stronger. https://t.co/PpUCtqOz6Z
— Narendra Modi (@narendramodi) October 6, 2020
'மிதமான மற்றும் அறிகுறியற்ற கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மூலிகைகள் மிக எளிதில் கிடைக்கின்றன. நோயைக் குணப்படுத்தும் முறையும் எளிமைப்படுத்தப்படுகிறது' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
இந்நிலையில், நரேந்திர மோடி இதனைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், "பாராட்டத்தக்க முயற்சி, இது நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!