ETV Bharat / bharat

கரோனாவை காரணம் காட்டி பிகார் தேர்தலை ஒத்திவைக்க முடியாது - உச்ச நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம்

டெல்லி : பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கரோனாவை காரணம் காட்டி அதனை ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Aug 28, 2020, 5:01 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. கரோனா வைரஸ் நோயின் தாக்கம் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு புறம் வெள்ள பாதிப்பால் அம்மாநிலம் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையே, இயல்பு நிலை திரும்பும் வரை தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தலுக்காக மக்கள் ஒரே இடத்தில் கூடினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை, நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இன்று (ஆக. 28) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, கரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும் இது குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையத்தை நாடும்படியும் மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, இது குறித்து நீதிபதி கூறுகையில், "அனைத்து சூழலையும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் கூற முடியாது. தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடாது" என்றார்.

"பெருந்தொற்று காலத்தில் தேர்தலை நடத்த முடிவெடுக்கப்பட்டதன் மூலம், 9.9 கோடி மக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள வயது வந்தோருக்கு பெருந்தொற்று பாதிக்காமல் இருக்க, தேர்தல் காலத்தில் பிரத்யேகமான வழிமுறைகளை வகுக்க முடியாது. தபால் மூலம் வாக்களிக்கும் முறை, வீடுகளுக்குச் சென்று வாக்குகளை பெரும் முறை உள்ளிட்டவற்றை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியாது" என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அதிகாரத்திற்கான புதிய சட்ட புத்தகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.