ETV Bharat / bharat

மதிய உணவு கிடைக்கவில்லை: விவசாய பண்ணை வேலைகளுக்கு திரும்பிய மாணாக்கர்கள்!

author img

By

Published : Jul 9, 2020, 1:34 AM IST

முசாபர்நகர்: மதிய உணவு கிடைக்காததால் பிகார் மாணாக்கர்கள் விவசாய பண்ணைகளுக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்.

With schools shut, no mid-day meals, kids return to farms in Bihar

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கினால் பள்ளிகள் செயல்படவில்லை.

இதனால் தேர்வுகளின்றி மாணவர்களின் தேர்ச்சியை பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி செப்டம்பர் இறுதியில்தான் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால், சிபிஎஸ்இ 30 விழுக்காடு பாடத்திட்டத்தை குறைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க பள்ளிகள் இல்லாததால், பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு கிடைக்காமல், பிகாரில் உள்ள பல மாணாக்கர்கள் விவசாய பண்ணைகளுக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்.

மாணாக்கர்கள் விவசாய பண்ணைகளில் தங்களது பெற்றோருக்கு உதவியாக நெல் பயிர் விதைக்க, களை எடுக்க உதவியும், சில மாணாக்கர்கள் ஆடு, மாடுகளை மேய்த்தும்வருகின்றனர்.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், மதிய உணவிற்கு பதில் பணம் கிடைக்கும் என அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அப்படி ஒன்றும் எங்களுக்கு அரசு வழங்கவில்லை” என்றார்.

இதையும் படிங்க....ஜார்க்கண்ட் அமைச்சருக்கு கரோனா - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.