ETV Bharat / bharat

கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த பாஜக எம்.பி., உயிரிழப்பு! - பாஜக மாநிலங்களவை எம்பி அசோக் கஸ்தி

பெங்களூரு: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாஜக எம்.பி., அசோக் கஸ்தி நேற்றிரவு (செப். 17) உயிரிழந்தார்.

Covid-hit BJP MP Gasti passed away
பாஜக மாநிலங்களவை எம்பி அசோக் கஸ்தி
author img

By

Published : Sep 18, 2020, 8:09 AM IST

கர்நாடக மாநில மாநிலங்களவை உறுப்பினரான அசோக் கஸ்திக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பெங்களூரு பழைய விமான நிலைய சாலையிலுள்ள மணிபால் மருத்துவமனையில் செப்டம்பர் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நோய்த்தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், நேற்றிரவு (செப். 17) 10.31 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் மணிஷ் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி. அசோக் கஸ்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக்குழுவினர் அவரை தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார்.

அசோக் கஸ்தியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அசோக் கஸ்தியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமித் ஷா, ஓம் பிர்லா என பாஜக-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் அவர் இறந்துவிட்டதாக கருதி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து அசோக் கஸ்தி உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்தது. இதன் பின்னர் சில மணி நேரங்களில் சிகிச்சைப் பலனளிக்காமல் அசோக் கஸ்தி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: வீடு திரும்பிய அமித்ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.