ETV Bharat / bharat

கரோனா எதிரொலி : நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கையைக் குறைத்த தேர்தல் ஆணையம் - இந்தியா செய்திகள்

கரோனா சூழல் முடிவுக்கு வரும் வரை நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும், பிரச்சாரங்களில் ஈடுபடும் அனுமதிக்கப்பட்ட நட்சத்திரப் பிரச்சாரகர்களின் எண்ணிக்கையைக் குறைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
author img

By

Published : Oct 8, 2020, 11:44 AM IST

கரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், நட்சத்திரப் பிரச்சாரகர்களைக் காண பெருமளவு மக்கள் கூட்டம் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், கரோனா சூழல் முடிவுக்கு வரும் வரை நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களுக்குமான நட்சத்திரப் பிரச்சாரகர்களின் எண்ணிக்கை குறித்த விதிமுறைகளை, இந்தியத் தேர்தல் ஆணையம் திருத்தி அமைத்துள்ளது.

அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகளுக்கான அதிகபட்ச நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கையை 40லிருந்து 30ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக்கான நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கை 20லிருந்து 15ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலை சமர்ப்பித்த அரசியல் கட்சிகள், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திருத்தப்பட்ட பட்டியலை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நேற்று (அக்.07) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நட்சத்திர பிரச்சாரகர்களின் பட்டியலை சமர்ப்பிக்கும் காலம் ஏழு ​​நாட்களில் இருந்து 10 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிகார் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர் மற்றும் அவரது குழுவினர் பிகார் சென்ற நிலையில், கரோனா சூழலுக்கு மத்தியில், நட்சத்திரப் பிரச்சாரகர்களால் ஏற்படக்கூடிய மக்கள் கூட்டம் குறித்து தங்களிடம் அச்சம் தெரிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

"இந்த விவகாரம் குறித்து ஆணையக்குழுவில் மேலும் விவாதிக்கப்பட்டது. தொற்றுப் பரவல் சூழல், தேர்தல் பிரச்சாரங்களுக்கான தேவை இரண்டையும் கருத்தில் கொண்டு நட்சத்திரப் பிரச்சாரகர்கள் குறித்த விதிமுறைகளை ஆணையம் திருத்தி அமைத்துள்ளது” என தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.