ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் : நாராயணசாமி அறிவிப்பு!

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றாலும் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Covid-19 vaccine will be free in puducherry

author img

By

Published : Oct 23, 2020, 11:06 PM IST

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கடற்கரையோரத்தில் வைப்பதற்கும், அவற்றை பழுதுபார்க்கவும் தங்களுக்கு பணிமனை கட்டடம் ஒன்று கட்டித்தர வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பட்டினச்சேரி, காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கான பணிமனைகள் புதுச்சேரி அரசால் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை இன்று (அக்.23) மாலை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்து, மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான மீனவ மக்களை பிற்படுத்தப்பட்டோர் சாதிப் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு நிதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: ஷட்டரை பூட்டி வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர் - வழக்கறிஞர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.