மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு புனே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர், ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன் உள்ளிட்ட பிற நோய்களினாலும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். கரோனாவிலிருந்து விரைந்து குணமடைய இவரை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தலாம் என எண்ணிய மருத்துவர்கள், கடந்த பத்து மற்றும் பதினோறாம் தேதிகளில் இருமுறை பிளாஸ்மா சிகிச்சை அளித்துள்ளனர்.
இதையடுத்து, இவரது உடலில் செலுத்தப்பட்ட கரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்தவரின் ரத்த அணுக்கள், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுத்தியது. பின்னர் கரோனா தொற்றிலிருந்து இவர் முழுவதுமாக குணமடைந்து கரோனா சிறப்பு வார்டிலிருந்து பொது வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். இவர் முற்றிலுமாக குணமடைந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முரளிதர் தம்பே தெரிவித்தார்.
மேலும், புனே மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் நபரே குணமடைந்ததால் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்த குணமடைந்தவர்!