சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தொற்று பரவியது. அங்கிருந்து சீனாவின் மற்ற மாகாணங்களுக்குப் பரவிய கோவிட்19 வைரஸ் காரணமாக இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் கோவிட் 19 பரவிவருகிறது. அமெரிக்காவில் கடந்த வாரம் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. அதேபோல, முன்னதாக கேரளா மாநிலத்திலும் இருவர் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின் அவர்கள் கோவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் இருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கோவிட் 19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியைச் சேர்ந்த நபர் இத்தாலி நாட்டிற்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நபர் துபாயிக்கும் சமீபத்தில் சென்று வந்துள்ளனர். இருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா - ஆஸ்திரேலியாவில் முதல் உயிரிழப்பு!