கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை பல மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எட்டு பேரில் ஆறு பேர் ஆண்கள், இருவர் பெண்கள்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 659ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
ஏற்கனவே கர்நாடகாவில் வைரஸ் தாக்குதலுக்கு 27 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 62 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த மே 3ஆம் தேதி விஜயபுராவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் மற்றும் இதயக் கோளாறு இருந்ததால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை...!