ETV Bharat / bharat

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கோவிட்-19 பரிசோதனை கட்டாயம் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: கோவிட்-19 பரிசோதனை, இணையதள முன்பதிவு சான்று இருந்தால் மட்டுமே, திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, காரைக்கால் ஆட்சியர் அர்ஜுன் சர்மா தெரிவித்தார்.

thirunallar-ceremony
thirunallar-ceremony
author img

By

Published : Dec 26, 2020, 1:52 AM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான் சன்னதியில், டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும், சனிப்பெயர்ச்சி விழாவை கோவிட்-19 தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மேலும், பக்தர்களை அனுமதிப்பது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில், அறநிலையத் துறை செயலர் சுந்தரேசன், காரைக்கால் ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்டோர் கலந்தாலோசித்து முடிவு செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இது தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, முன்னரே தீர்மானித்த பாதுகாப்பு விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, சிறப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் சனிப்பெயர்ச்சி விழாவில், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

thirunallar-ceremony

கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த சான்றிதழுடன் இணையதள முன்பதிவு கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், மேற்குறிப்பிட்டுள்ள இரண்டும் இன்றி பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த நடைமுறை ஜனவரி 24ஆம் தேதி வரை பின்பற்றப்படும் என்றும், பக்தர்கள் வரும் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி அன்று ஒரே நாளில் தரிசனம் செய்ய ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.