இது தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "வெளிமாநில தொழிலாளர்களின் பட்டினியை போக்க தெலங்கானா அரசு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக உள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகளை அரசு வழங்கும். தொழிலாளர்கள் அச்சத்துடன் தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்.
நீங்கள் இந்த அரசுக்கு சேவை செய்ய வந்தீர்கள். இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் நீங்கள் பங்களித்துளீர்கள். நாங்கள் உங்களை எங்கள் சகோதரர்கள், சகோதரிகளாக கருதுகிறோம்.
ஜார்க்கண்ட், பிகார், ஒடிஸா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து 3.5 லட்சம் தொழிலாளர்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஐதராபாத், அதைச் சுற்றியுள்ள ரங்கா ரெட்டி, மேட்சல், பெடப்பள்ளி, கம்மம், ராமகுண்டம் ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். இவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தேவைப்பட்டால் செயல்பாட்டு அரங்குகளில் தங்குமிடம் வழங்கப்படும்", என்றார்.
இதையும் படிங்க:கரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய 11 பேர் - முதலமைச்சர் சந்திரசேகர ராவ்