ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து சுமார் 18 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு வெள்ளி-சனி இரவு டெல்லி வந்தடைந்தது. இந்தியாவில் பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாகப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
"பைஸ்ஜெட் விமானம் எஸ்.ஜி. 7017 சுமார் 18 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்களை சீனாவிலிருந்து எடுத்துவந்துள்ளது. நாட்டிற்குத் தேவைப்படும் மருந்துப் பொருள்களைக் கொண்டுவரும் சேவையில் எங்கள் விமானம் ஈடுபட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லைஃப் லைன் உதான் திட்டத்தின்கீழ் 649 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் இதுவரை 368 விமானங்களின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரேபிட் டெஸ்ட் சோதனை தற்போதைக்கு வேண்டாம்: அதன் துல்லியத்தை ஐ.சி.எம்.ஆர் ஆராய்கிறது!