தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனிடையே, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். இதில், தற்சார்புள்ள நாடாக திகழ்வதே கரோனாவிடமிருந்து கற்றகொள்ள வேண்டிய பாடம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு கிராமங்கள் தற்சார்புள்ளவையாக மாறுவது அவசியமாகிறது. கரோனா வைரஸ் நோயால் இதுவரை சந்தித்திராத சவால்களை நாடு சந்தித்துள்ளது.
இருப்பினும், மக்கள் புதியவற்றை கற்க இது உதவியுள்ளது. குறைவான வசதிகள் இருந்தபோதிலும், இன்னல்களிடம் அடிபணிவதை தவிர்த்து மக்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்" என்றார்.
மேலும், சமூக இடைவெளிக்கு பதில் அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் தகுந்த இடைவெளி என்ற பெயரை சூட்டிய கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு மோடி பாராட்டி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபானம் விற்க அனுமதி? - உள் துறை அமைச்சகம் பதில்!