கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளையும் அச்சுறுத்திவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் அசிம் மாத், கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க ஸ்ரீநகரில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
இந்த அறிவுறுத்தலின்படி, ஸ்ரீநகரில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவை இன்று (மார்ச் 12) முதல் மேல் அலுவலர்களின் மறு உத்தரவு வரும்வரை மூடப்படும்.
அத்துடன் மாநகராட்சிக்குள்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரத்தை ஆய்வுசெய்யவும், நோய் தடுப்புக்கான உபகரணங்கள் அமைப்பது குறித்து திட்டமிடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு, சம்பா, கத்துவா, ராசி, உதம்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சினிமா அரங்குகள் மார்ச் 31 வரை மூடப்படும். இதனால் வரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
’கொரோனா பாதிப்பு இல்லை’- சான்று இல்லாமல் இத்தாலியில் தவிக்கும் இந்திய மாணவர்கள்!