திருவனந்தபுரம் விமானம் நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அம்முடிவை எதிர்த்து மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் இயற்ற முடிவு எடுத்து சட்டசபையின் ஒரு நாள் சிறப்புக்கூட்டத்தை இன்று நடத்தியது.
இக்கூட்டம் கோவிட்-19(ஆகஸ்ட் 24) தடுப்பு நெறிமுறைகளின் படி நடைமுற்றது. சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்த உறுப்பினர்கள், அவர்களது தனிப்பட்ட உதவியாளர்களுக்கு கரோனா சோதனைகள் நடத்தப்பட்டன.
அதில், பெரும்பாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் குன்னப்பிள்ளியின் உதவியாளருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்தவுடன், குன்னப்பிள்ளி தனிமைப்படுத்திக்கொண்டார். சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்றினர்.
இதையும் படிங்க: திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை விவகாரம்: மோடிக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்!