மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ஜூலை 5 ஆம் தேதி திருடியதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்பு அவருக்கு சளி, காச்சல் இருப்பதை கண்டறிந்த காவலர்கள் கரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்த பின் மீண்டும் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கேயே இருந்துள்ளார். மறுநாள் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க இரண்டு காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், காவலர்களிடமிருந்து கரோனா உறுதி செய்யப்பட்ட திருடன் தப்பித்து ஓடியுள்ளார்.
தற்போது இவரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் அமைச்சருக்கு கரோனா - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!