ETV Bharat / bharat

புனேவில் கரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு! - COVID-19 patient woman gives birth

மும்பை: கரோனாவால் பாதிக்கப்பட்ட புனேவைச் சேர்ந்த 25 வயது கர்ப்பணி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுத்தார்.

COVID-19 patient woman gives birth to uninfected boy in Pune

author img

By

Published : Apr 23, 2020, 11:11 AM IST

இந்தியாவில் கரோனாவால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை 5,652 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 25 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஆரோக்கியமாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை ஆரோக்கியமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு அக்குழந்தை தனிவார்டில் வைத்து செவிலியர்கள் கவனித்துவருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: மாஸ்க் தயாரிக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.