ETV Bharat / bharat

கரோனா இல்லைனா கோயிலுக்கு வரலாம் - கேரள தேவசம் துறை அமைச்சர்

author img

By

Published : Aug 11, 2020, 3:07 PM IST

Updated : Aug 11, 2020, 3:16 PM IST

திருவனந்தபுரம் : சபரிமலை தரிசனத்திற்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sabarimala pilgrims
Sabarimala pilgrims

கரோனா பரவல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மார்ச் இறுதி வாரம் முதல் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள முக்கியக் கோயில்கள் பல கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.

இருப்பினும், வைரஸ் பரவல் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலங்களில் நிலவும் சூழலைப் பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் வழிபாட்டுத் தலங்களை திறக்கும் முடிவுகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் சபரிமலை சீசன் தொடங்கவுள்ளதால், கோயில் திறப்பு குறித்து கேரள அரசு என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இது குறித்த ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

வருகிற நவம்பர் 15ஆம் தேதி கோயிலில் மகர விளக்கு பூஜை நடைபெறவுள்ள நிலையில், தற்போதுள்ள கரோனா பரவல் காரணமாக கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதில் நவம்பர் 16ஆம் தேதி முதல் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களுக்கு கரோனா இல்லை (நெகட்டிவ்) என்பதை உறுதி செய்யும் வகையில் கட்டாயம் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், "இனி வரும் காலங்களில் இன்னும் சில ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். மேலும், தரிசனத்தின்போது பின்பற்ற வேண்டிய சரியான நெறிமுறைகள் குறித்தும் முடிவு செய்யப்படும். வரவிருக்கும் கூட்டங்களில் முதலமைச்சரும் கலந்துகொள்வார்" என்றார்.

கோயிலுக்குள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோயிலின் உள் தகுந்த இடைவெளி முறையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சி கதை!

Last Updated : Aug 11, 2020, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.