வைரஸ் மரபணு இதுவரை 198 மாற்றங்களைச் செய்துள்ளது. (இது பச்சோந்திக்கு தாத்தா போல இருக்கிறது). சார்ஸ் கோவ்- II ன் இந்த மரபணுக்களில் 198 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக 7,500 பேரிடம் விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு மரபணுக்கள் பல வடிவங்களாக மாறுகின்றன என்பதை நிறுவியுள்ளனர்.
சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசியைத் தயாரிப்பதற்கும், இந்த ஆய்வு உதவும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட இது தொடர்பான ஒரு ஆய்வுக் கட்டுரை “ஜர்னல் இன்ஃபெக்சன்” என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மனித உடலில் வைரஸ் எவ்வாறு தொடர்ந்து இருக்கிறது என்பது குறித்தும், மரபணுக்களின் மாற்றங்கள் மற்றும் அது தொடர்புடையப் பிற தகவல்கள் குறித்தும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். குறிப்பாக, மனித உடலில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில், உடலில் 198 மாற்றங்கள் நிகழ்ந்ததைக் கண்டறிந்தனர். இதனால், மனித உடலில் பொதுவாக நிகழும் உயிரணுக்களின் மாற்றங்களுக்கு ஏற்ப மரபணுக்கள் பல வடிவங்களாக மாறுகின்றன என்பது தெளிவாகிறது. இயற்கையாகவே, வைரஸ் மனிதர்களைத் தாக்கும்போது, பல மாற்றங்களை மேற்கொள்ளும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.
இருப்பினும், சார்ஸ் கோவ்- II வைரஸ் மரபணுக்கள் விரைவாக மாறுகிறதா, மெதுவாக மாறுகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வைரஸில் மரபணு மாற்றங்கள் மிக விரைவாக ஏற்பட்டால் மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் திறம்பட இயங்காது.
எனவே, வைரஸில் மெதுவான மாற்றங்கள் ஏற்படும் பகுதிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் நீண்ட காலம் மிகவும் திறம்பட செயல்படும் மருந்துகள் அல்லது தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தப் பின்னணியில், சிகிச்சையின் போது வைரஸ் எளிதில் தப்பிக்காமல் இருக்க தடுப்பூசிகள், மருந்துகளைத் தயாரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
வைரஸ்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரான்சிஸ் பெல்லாக்ஸ் கூறுகிறார்.
இதையும் படிங்க: T3 உத்தியால் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த ஜெர்மனி - மருத்துவர் மரியா சென்னமனேனி