ETV Bharat / bharat

ஆட்டோமொபைல் துறையில் மீண்டும் வேலையிழப்புகள் நிகழும்! - Tamil business news

டெல்லி: ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியின்போது சந்தித்த வேலையிழப்பைப் போன்ற நெருக்கடியான சூழலை கரோனா தாக்கத்தினால் மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் என்று வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Job cut
Job cut
author img

By

Published : Jun 14, 2020, 10:28 PM IST

Updated : Jun 15, 2020, 6:44 AM IST

வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations) கரோனா தாக்கத்தின் விளைவாக ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வாகன விற்பனைத் துறையில் பெரும் வேலையிழப்புகள் நிகழும் என வருத்தம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைக் கண்டபோது, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலையிழப்புகள் நிகழ்ந்தன. வாகன தேவை என்பது அதிகரித்தால் மட்டுமே இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள முடியும் எனவும் வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

மேலும், வேலையிழப்புகள் என்பது இறுதிக்கட்டம்தான். இதுவரையிலும் எந்த விற்பனை அங்காடி முகவர்களும் தங்கள் கடைகளை முற்றிலுமாக அடைக்கவில்லை. எனவே, சந்தையின் வேகத்தைத் தொடர்ந்து ஆராய்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதல பாதாளத்தில் ஆட்டோமொபைல் துறை - 87% விற்பனை சரிவு!

Last Updated : Jun 15, 2020, 6:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.