கோவிட்-19 எனும் கரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று (ஜூன் 15) 151 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதன் மூலம், அம்மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,309ஆக அதிகரித்துள்ளது.
இதில், 2,205 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 2,093பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை அஸ்ஸாமில் கரோனா தொற்றின் காரணமாக எட்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாத 10,667 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,69,798 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 106 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 9,520 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி