கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (செப். 03) ஒரே நாளில் மட்டும் 83 ஆயிரத்து 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 747ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 37 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஆயிரத்து 96 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 472ஆக உயர்ந்துள்ளது. தற்போது, எட்டு லட்சத்து 31 ஆயிரத்து 124 பேர் மருத்துவமனைகள், முகாம்களில் தங்கவைக்கப்பட்ட சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் ஏழாம் தேதி 20 லட்சத்தைக் கடந்தது. பின்னர் ஆகஸ்ட் 23ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நகரங்களைவிட கிராமங்களில் வேகமெடுக்கும் கரோனா பரவல்!