இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ”இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 991 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387இல் இருந்து 14,378அக அதிகரித்துள்ளது. அதேசயம், இத்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 43 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437இல் இருந்து 480ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மத்தியப் பிரதேசம் (16), ராஜஸ்தான் (8), மகாராஷ்டிரா (7), குஜராத் (5), டெல்லி (4), பீகார், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவரும் அடங்குவர்.
நேற்று ஒருநாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 243 பேரும் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,192ஆக அதிகரித்துள்ளது..
இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 3,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் 1,707 பேரும், தமிழ்நாட்டில் 1,323 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,310 பேரும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:21 கடற்படை வீரர்களுக்கு கரோனா பாதிப்பு