ETV Bharat / bharat

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 62 ஆயிரத்து 211 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

COVID-19
COVID-19
author img

By

Published : Oct 17, 2020, 12:37 PM IST

நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 62 ஆயிரத்து 211 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 837 நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (அக்.16) 63 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவான நிலையில், இன்றைக்கு 62 ஆயிரத்து 211ஆக் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 74 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 74 லட்சத்து 32 ஆயிரத்து 680 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏழு லட்சத்து 95 ஆயிரத்து 87 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

65 லட்சத்து 24 ஆயிரத்து 595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 998 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது லட்சத்து 99 ஆயிரத்து 90 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் ஒன்பது கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 17 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான போர் : அடுத்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமானவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.