நாட்டில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 146ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்றினால் பாதிக்கப்பட்டு ஏழாயிரத்து 750 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களில் மொத்தமாக நான்காயிரத்து 426 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. தற்போது மூன்றாயிரத்து 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதில் அஸ்ஸாமில் இரண்டாயிரத்து 937 பேர், திரிபுராவில் 866 பேர், மணிப்பூரில் 304 பேர், நாகலாந்தில் 127 பேர், மிசோரமில் 88 பேர், அருணாச்சலப் பிரதேசத்தில் 34 பேர், மேகலயாவில் 13 பேர், சிக்கிமில் 13 பேர் என கரோனா தீநுண்மி தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வேறு மாநிலங்களில் வேலைசெய்த ஊழியர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதால், கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதில் சென்னையிலிருந்து அஸ்ஸாம் வந்த இருவர் நேற்று கரோனா தீநுண்மி தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அஸ்ஸாமில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க...மக்களுக்குதான் ஊரடங்கு... எங்களுக்கில்லை! - நடு ரோட்டில் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை