இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
ஆனால், கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா என சந்தேகம் நிலவி வந்தது.
இந்நிலையில் இக்குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.
இந்தியர்களை ஹஜ் பயணத்திற்கு அனுப்ப வேண்டாம் என சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் முகமது சாலே பின் தஹீர் நேற்று தன்னிடம் தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்தே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் நக்வி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று (23-06-2020) ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வெளிநாட்டு வழிபாட்டாளர்கள் யாரும் சவுதி வர வேண்டாம் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சீன ஊடகங்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா!