மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின் படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,897 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் 70 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,007ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் 897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,695ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் கரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 9318 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள் வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.
மாநிலங்கள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் | குணமடைந்தவர்கள் |
மகாராஷ்டிரா | 9,318 | 400 | 106 |
குஜராத் | 3,744 | 434 | 181 |
டெல்லி | 3,314 | 54 | 1078 |
மத்தியப் பிரதேசம் | 2,387 | 120 | 377 |
ராஜஸ்தான் | 2,364 | 51 | 768 |
தமிழ்நாடு | 2,058 | 25 | 1,168 |
உத்தரப் பிரதேசம் | 2,053 | 34 | 462 |
ஆந்திரப் பிரதேசம் | 1,259 | 31 | 248 |
தெலங்கானா | 1,004 | 26 | 321 |
மேற்கு வங்கம் | 725 | 22 | 119 |
ஜம்மு காஷ்மீர் | 565 | 8 | 176 |
கர்நாடகா | 523 | 20 | 207 |
கேரளா | 485 | 4 | 359 |
பிகார் | 366 | 2 | 64 |
பஞ்சாப் | 322 | 19 | 71 |
ஹரியானா | 310 | 3 | 209 |
ஒடிசா | 118 | 1 | 38 |
ஜார்க்கண்ட் | 103 | 3 | 17 |
சண்டிகர் | 56 | 0 | 17 |
உத்தரகாண்ட் | 54 | 0 | 33 |
இமாச்சலப் பிரதேசம் | 40 | 1 | 25 |
அசாம் | 38 | 1 | 27 |
சத்தீஸ்கர் | 38 | 0 | 34 |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 33 | 0 | 15 |
லடாக் | 22 | 0 | 16 |
மேகாலயா | 12 | 1 | 0 |
புதுச்சேரி | 8 | 0 | 3 |
கோவா | 7 | 0 | 7 |
திரிபுரா | 2 | 0 | 2 |
மணிப்பூர் | 2 | 0 | 2 |
அருணாச்சலப் பிரதேசம் | 1 | 0 | 1 |
மிசோரம் | 1 | 0 | 0 |
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பால் அதிர்ச்சி!