இந்தியாவில் கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டோர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியானது.
இன்று மாலை 4.45 மணிக்கு வெளியான அந்தத் தகவலின்படி, இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 244 பேர் இந்தியர்கள். 39 பேர் வெளிநாட்டவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்கள் அனைவருமே நலமாக வீடு திரும்பி உள்ளனர் என்றும் அதில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதால் அவர் சொந்த நாட்டுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டார்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இது வரை நான்காக உள்ளது. அவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கொடிய நோயை எதிர்த்து போராடுவதற்குத் தனிமைப்படுத்துதல் மிகவும் முக்கியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு தற்போதைய தேவை தனிமைப்படுத்தப்படும் இடங்களே!