கரோனா ஊரடங்கால் பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி இன்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, தன் 1,100 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளது. கரோனா ஊரடங்கால் உணவு விநியோகப் பணிகள் பெருமளவு முடங்கியுள்ளதால், தாங்கள் இம்முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்விகி நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஸ்விக்கி நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை அலுவலருமான ஸ்ரீஹர்ஷா மெஜெடி, தங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை உண்மையில் இது ஒரு வருந்தத்தக்க நாள் என்றும், தங்கள் நிறுவனத்தை சிறிதுபடுத்தும் சூழ்நிலைக்கு எதிர்பாராதவிதமாக தாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பணி நீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களுக்கான பராமரிப்புத் தொகுப்பின் விபரங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வூழியர்கள் அனைவருக்கும் அவர்களின் அறிவிப்புக் காலம் அல்லது பதவிக் காலத்தைப் பொருட்படுத்தாமல் குறைந்தது மூன்று மாத சம்பளம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட விபத்திற்கு காங்கிரஸ் தான் காரணம்' - யோகி ஆதித்யநாத்!