கர்நாடகாவில் ஐம்பது வயதான காவலர் ஒருவர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து, கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு நம்பிக்கை கூறும் விதமாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்று பாதிக்கப்பட்ட காவலர் உள்பட எந்த ஒரு அரசு அலுவலரும் மனம் உடைய வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் அரசு உங்களை கைவிடாது.
மாநிலத்தில் கூடுதல் கரோனா பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா இறப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் ஆறு ஆயிரத்து 283 ஆகவும், டெல்லியில் இரண்டு ஆயிரத்து 233 ஆகவும், குஜராத்தில் ஆயிரத்து 684 ஆகவும், தமிழ்நாட்டில் 794 ஆகவும் உள்ளது.
அந்த வகையில் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதிம் குறைவுதான்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
கர்நாடகாவில் கரோனா பாதிப்பு ஒன்பது ஆயிரத்து 399 ஆக உள்ளது. இதில் ஐந்தாயிரத்து 730 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 142 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் கோவிட்-19 இறப்பு விழுக்காடு குறைவு - சுகாதார அமைச்சகம்