கோவிட்-19 வைரஸ் தொற்றின் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதேபோல வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்குத் தேவைப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர். உடன் இணைந்து மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.
அதன்படி உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 75 விழுக்காடு ஐசோபிரபனோலுடன் கூடிய சானிட்டைசர்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேபோல, தேங்காய் எண்ணெய், சோடியம் ஹைப்போகுளோரைட் ஆகிய பொருள்களுடன் கை கழுவ உதவும் ஹேண்ட்வாஷ்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை சுமார் 350 லிட்டர் ஹேண்ட் சானிட்டைசர்களும், 250 லிட்டர் ஹேண்ட்வாஷ்களும் 1,000 லிட்டர் கிருமி நாசினிகளும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
-
@CSIR_CECRI @CSIR_IND
— CSIR-CECRI (@CSIR_CECRI) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Fight Against COVID-19:
CSIR-CECRI's activities published in PIB (Press Information Bureau, Government of India) today:https://t.co/TZ3ArdGGZc pic.twitter.com/mzK1xOej1R
">@CSIR_CECRI @CSIR_IND
— CSIR-CECRI (@CSIR_CECRI) April 8, 2020
Fight Against COVID-19:
CSIR-CECRI's activities published in PIB (Press Information Bureau, Government of India) today:https://t.co/TZ3ArdGGZc pic.twitter.com/mzK1xOej1R@CSIR_CECRI @CSIR_IND
— CSIR-CECRI (@CSIR_CECRI) April 8, 2020
Fight Against COVID-19:
CSIR-CECRI's activities published in PIB (Press Information Bureau, Government of India) today:https://t.co/TZ3ArdGGZc pic.twitter.com/mzK1xOej1R
காரைக்குடியிலுள்ள மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமங்களிலுள்ள பெண்களுக்கு மாஸ்க்குகளை செய்யும் பயிற்சியும் டிஜிட்டல் முறையில் மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய உதவும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!