நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆயிரம் ரூபாய் அறிவிப்பு பொருந்தும் என முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தற்போதுள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு, அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் எனவும், டிபிடி முறைப்படி ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மாநிலம் முடக்கப்படும் என முதலமைச்சர் நித்திஷ் குமார் அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் 21 நாட்களுக்கு தேசம் முழுவதும் முடக்கப்படும் என நேற்று பிரதமர் மோடி அறிவித்தார். 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் அமைப்புசாரா துறையை நம்பியிருக்கிறது. எனவே இந்த சூழலில் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.