உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் கரோனா வைரசால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 7 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 535 பேரும், உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரத்து 373 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், மே 3ஆம் தேதிக்குப் பிறகு சில தளர்வுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதையடுத்து கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: 'ரூ.30 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குக'- சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்