லண்டனிலிருந்து லக்னோவுக்கு திரும்பிய பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாமல் பல விழாக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பலருக்கும் கரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசு பிறப்பித்த விதிகளை மீறி அலட்சியமாகப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காரணத்தால் கனிகா கபூர் மீது பிகார் மாவட்ட நீதிமன்றத்தில் சுதீர் குமார் ஒஜா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு வைரஸ் தொற்று இருப்பதை மறைத்துவிட்டு அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். நோய்த்தொற்று பரவமால் இருக்க இவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு