ETV Bharat / bharat

கரோனா பரவலால் தள்ளாடும் வேளாண் துறை - உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வது எப்படி? - கரோனா பரவலால் தள்ளாடும் வேளாண் துறை

கரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் சீர்செய்ய முடியாத பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், வேளாண் தயாரிப்பு கடும் பாதிப்பினை சந்தித்துள்ளது. உணவுத் தயாரிப்பு பாதிக்கப்படாமலும், மற்றொரு சர்வதேச நோய் பரவல் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையிலும் இதுகுறித்து அரசு எடுக்க வேண்டிய குறுகிய கால, நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து இந்தக் கட்டுரையில் இந்திரா சேகர் சிங் விளக்கியுள்ளார்.

விவசாயி
விவசாயி
author img

By

Published : Apr 19, 2020, 9:24 AM IST

கரோனா தொற்றால் கொள்ளை நோய், குழப்பம், பசி, பட்டினி ஆகிய அரக்கர்களின் பிடியில் இந்தியா சிக்கித் தவித்து வருகிறது. கரோனா சரியான முறையில் கையாளப்படாவிட்டால் உலகம் முழுவதும் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என உலக சுகாதார மையமும் உலக வர்த்தக மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளன. நம் பிரதான இரண்டு உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலை ஏற்கனவே உயர்ந்த வண்ணம் உள்ளது. உணவுப் பொருட்கள் பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்கப்படுவது ஆகியவை சந்தைகளின் நிலையற்ற தன்மையையே காட்டுகின்றது.

விவசாயப் பொருட்களின் உற்பத்தி சீனா மட்டுமல்லாது அனைத்து நாடுகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயப் பொருட்களின் சந்தையும், உற்பத்தி சங்கிலியும் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் விவசாயத் துறை இங்கு ஏற்கனவே பெரும் இடர்பாடுகளுக்குள் சிக்கிவிட்டது.

பழங்கள் தொடங்கி தேநீர் வரை, விவசாயத்துறையின் உட்பிரிவுகளான விதைகள், உற்பத்திப் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையை மேம்படுத்த வேண்டுமென்றால் மற்றொரு சர்வதேச நோய்த் தொற்று வந்தால் அதையும் எதிர்கொள்ளும் விதத்தில் அரசு குறுகிய கால, நீண்ட கால அடிப்படையில் சில துயர் நீக்க நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொண்டாக வேண்டும்.

குறுகிய காலத் துயர் நீக்க நடவடிக்கைகள்:

  • அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை, வன்முறை ஆகியவை கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். காவல் துறையினர் உற்பத்தி சாலைகளை மூடக்கோரி விவசாயிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காவல் துறையினரின் இத்தகைய செயல்களைக் கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட வேண்டும்.
  • வேளாண் துறையின் கிஸான் தொலைத்தொடர்பு மைய எண்ணான 1800 180 1551, இந்தக் கரோனா பெருந்தொற்று கால உதவி எண்ணாக அறிவிக்கப்பட வேண்டும். வேளாண் வல்லுநர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் இந்த இணைப்பில் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் சார்பில், சமூக வலைதளங்களில் காணொலி மூலம் தனி மனித இடைவெளி, வேளாண் சார்ந்த சுகாதார நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட வேண்டும். இதில் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் குறுந்தகவல்கள் மூலம் தொடர்பு கொள்ளப்பட வேண்டும்.
  • இந்திய ரயில்வேத் துறை முடிந்த அளவு இதில் பங்காற்ற வேண்டும். விவசாய உற்பத்திப் பொருட்களையும், இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல உதவ வேண்டும். பயணிகள் ரயிலும் இந்தப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் ரயில்வேத் துறையும் வருமானம் ஈட்டலாம். ரயில்வேத் துறையின் சரக்கு முகவர்களும் இதில் உதவ அத்துறை ஆவண செய்ய் வேண்டும்.
  • விதைப்பண்ணைகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். வட்டி இல்லாக் கடன், குறைந்த வட்டிக் கடன் உள்ளிட்டவை இதில் அடக்கம்.
  • விவசாய உள்ளீட்டுப் பொருட்களின் உற்பத்தி தற்போது உறைந்து போய் உள்ளது. எனவே இந்த விவசாயப் பொருட்களின் சார்புப் பொருட்களின் உற்பத்தியை (By Products) மேற்கொள்ள விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளித்து ஊக்கப்படுத்தலாம்.
  • அனைத்து சந்தைகளும், மண்டிகளும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • விவசாயப் பொருட்களின் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும் வகையில், பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக்குகள் உள்ளிட்ட இதர வாகன நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து உள், வெளி மாவட்ட போக்குவரத்துகளுக்கு வழிவகுக்க வேண்டும்.
  • சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிராமப்புற பள்ளிகள், பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள் சேமிப்புக் கிடங்குகளாக உபயோகிக்கப்பட வழிவகை செய்யப்பட வேண்டும்.

நீண்ட கால நடவடிக்கைகள்:

  • வேளாண் பொருட்களைப் பொறுத்தவரையில், தேவையான போக்குவரத்து சேவைகள் கிடைக்கப் பெறாவிட்டால் பசியும், பட்டினியும், உணவுப் பஞ்சமும் எந்நேரமும் நாட்டை ஆட்கொண்டு விடும். இத்தகைய காலக்கட்டத்தில் விவசாயக் கொள்கைகள் திருத்தம் செய்யப்பட்டு அதிகாரங்கள் அரசால் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்தந்த ஊர்களுக்கு ஏற்ற ஒரே தானியங்களை பயிர் செய்வதை விடுத்து, ஒன்றிற்கும் மேற்பட்டவற்றை பயிர் செய்ய முற்பட வேண்டும். ஒரே மாவட்டத்திற்குள் பொது மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அரிசி, கோதுமை என மாறுபட்ட தானியங்களையும் எண்ணெய் பயிர்கள், காய்கறிகளையும் பயிர்செய்ய முற்பட வேண்டும். ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளும் மாவட்டங்களிடையே போதுமான தானியக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தியின் கிராம ஸ்வராஜ் யோசனையை அடிப்படையாகக் கொண்டு அதை இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாற்றியளித்து பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு மாவட்டமும் விதைகள் தயாரிப்பில் ஈடுபடுவதையும், விதைப் பண்ணைகள், விதைக்கிடங்குகள் அனைத்து மாவட்டங்களின் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து முக்கிய நகரங்களைச் சுற்றியும் பசுமை மண்டலங்கள் இருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் இதன் மூலம் தங்கள் உற்பத்தியைப் பெருக்க முடியும்.
  • தேவைகளைப் போக்கிக் கொள்ளும் விதத்தில் உணவு சூழலியல் அமைப்பானது நகரங்களைச் சுற்றி உருவாக்கப்பட வேண்டும். இதனால், உணவுத் தட்டுப்பாடு, போக்குவரத்துத் தட்டுப்பாடு ஏற்படும் கால கட்டங்களிலும் நகரங்கள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டு தடையற்று இயங்கும். நகர்புற தோட்ட உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்களை தேவைப்பட்டால் நகர்ப்புற உணவுத் தோட்டங்களாக மாற்ற உதவ தோட்டக்கலைத் துறையினர் திட்டங்களைத் தயாரிக்கலாம்.
  • கிராமப்புறப் பகுதிகள், மழைப்பொழிவு அதிகமுள்ள இடங்களில் இயற்கை விவசாயத்தையும் விதை சேமிப்புகளையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் உதவியோடு வேறுபட்ட பயிர் வளர்ப்பு, திணைப் பயிர்கள் வளர்ப்பு ஆகியவற்றை பின்பற்ற ஊக்கப்படுத்த வேண்டும்.

உணவு சூழலியல் அமைப்பு:

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் விதைகள் உற்பத்தி, தானியக் கிடங்குகள் அமைத்தல், சந்தை, வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கவனம்செலுத்தி சரியான உள்ளூர் உணவுப் பொருட்களுக்கான உற்பத்தி சூழலை உருவாக்க வேண்டும். பால், பால் சார்ந்த பொருட்கள் எவ்வாறு பரவலான முறையில் விநியோகம் செய்யப்பட்டு மக்களை சென்றைடைகிறதோ அதே வகையில், இந்த உணவுப் பொருட்களும் அனைத்து குடிமக்களிடமும் எளிமையான, நியாயமான முறையில் சென்றடைய வேண்டும். அதுதான் மற்றுமொறு சர்வதேச நோய் பரவல் ஏற்படும் சூழலில் மாநிலங்கள் தன்னிச்சையாகத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு பிறருக்கும் உதவ வழிவகுக்கும்.

( கட்டுரையாளர் - இந்திரா சேகர் சிங், இயக்குநர்- நேஷனல் சீட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா )

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.