கேரள மாநிலம் திஸ்ஸூர் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதி சமீபத்தில் சவுதி அரேபியா சென்று திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை.
இதையடுத்து, அவர்கள் 14 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார்கள். இந்நிலையில், தம்பதிக்குத் தேவையான பொருள்களை அவர்களின் உதவியாளர் வாங்கிவந்துள்ளார். உதவியாளர் பொருள்களை வீட்டின் முன்புறம் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது கதவைத் திறக்க அவர்கள் முயன்றபோது, அது வெளியே பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் காவல் துறையில் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "வயதான தம்பதி ஏற்கனவே வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவந்தனர். இருப்பினும், அக்கம் பக்கதினர் கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக அவர்களை உள்ளே வைத்துப் பூட்டியுள்ளனர். இது குறித்து ஸ்டிக்கர்களையும் கதவில் ஒட்டியுள்ளனர். இது சரியான அணுகுமுறை அல்ல" என்றார்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் நான்கு பேரைக் கைது செய்துள்ளதாவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா சேலன்ஞ் - மோடியின் அடுத்த சரவெடி