இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனாவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக குஜராத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 367 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனால், அம்மாநிலத்தில் இதுவரை 1,743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அகமதாபாத் ஜமல்பூர் - காடியா சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கு நேற்று கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அகமதாபாத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. அதில் ஒன்பது போக்குவரத்து காவலர்களும் அடங்குவர்
இது குறித்து கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் விஜய் படேல் கூறுகையில், நேற்று ஜமல்பூர் - காடியா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரது காவல் நிலையத்தில் பணிபுரம் 15 காவலர்களையும் தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 காவலர்களும் தனிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக, ஜமல்பூர் - காடியா சட்டப்பேரவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இம்ரான் கெதாவாலா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பி.எம்.டபிள்யூ இந்திய தலைமை நிர்வாக அலுவலர் உயிரிழந்தார்!