மும்பை: பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு உள் அலங்கார வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவலர்கள் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் நவ.7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. அந்த வகையில் இந்த வழக்கு சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்படும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அர்னாப் கோஸ்வாமியுடன் பெரோஷ் ஷேக் மற்றும் சர்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க அலிபாக் மாவட்ட நீதித்துறை நடுவர் புதன்கிழமை (நவ.4) உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கோஸ்வாமியின் தரப்பு உயர் நீதிமன்றத்தில் கைது நடவடிக்கைக்கு எதிராக முறையிட்டது. அந்த மனு, நாளை மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அர்னாப் கோஸ்வாமி தனது மனுவில், “மும்பை காவலர்கள் என்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னையும், என் மாமியார், மாமனார், மகன், மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக தாக்கினார்கள்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அர்னாப் கைது; மகாராஷ்டிர அரசை விமர்சித்த பாஜகவுக்கு சிவசேனா கண்டனம்!