ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் பட் என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது. முதலில் அவரது உடலை வாங்க மறுத்த இந்திய அரசு உடலை திருப்பி அனுப்பியது.
அதன்பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் உறவினர்கள் கோரிக்கையை முன்வைத்து நமது ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றி கமலேஷ் பட் உடலை உறவினர்கள் பெற மத்திய உள் துறை அமைச்சமகம் அனுமதி அளித்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடுக்கப்பட்டது. உடலைப் பெறுவதற்காக மருத்துவ பரிசோதனை சான்றுகளை அரசே ஆய்வுசெய்து முடிவெடுக்காலம்.
அதைவிடுத்து, உடலைத் திருப்பி அனுப்பியது ஏன் எனக் கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் இந்தியா வர அனுமதி