ETV Bharat / bharat

குஜராத் சபர்மதி ரயில் எரிப்பு குற்றவாளிக்கு பிணை! - ஃபரூக் பனா

கோத்ரா சபர்மதி ரயில் எரிப்பு குற்றவாளி யாகூப் படாலியாவுக்கு 10 நாள்கள் பிணை வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002 Sabarmati train massacre  Gujarat High court  Yayuk Patalia  bail to Yayuk Patalia  2002 Godhra Sabarmati train massacre case  Sabarmati Express train  Farooq Bhana  Sabarmati  train  fire  convict  சபர்மதி ரயில் எரிப்பு  கோத்ரா ரயில் எரிப்பு  யாகூப் படாலியா  குஜராத் உயர் நீதிமன்றம்  ஃபரூக் பனா  2002 குஜராத் கலவரம்

author img

By

Published : Aug 21, 2020, 3:05 PM IST

ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலம் கோத்ரா சபர்மதி ரயில் நிலையத்துக்கு 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வந்த ரயிலில், எஸ்-6 பெட்டியில் இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் இருந்தனர்.

இந்த ரயில் பெட்டி மீது 140 லிட்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் படாலியா.

இவரின் 54 வயதான மனைவி 70 விழுக்காடு மாற்றுத் திறனாளியாக உள்ளார். 24 வயதான மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்.

இந்த கரோனா நெருக்கடி காலத்திலும், எனது மனைவி மற்றும் மகனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. ஆகவே எனக்கு பிணை வழங்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் யாகூப் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, யாகூப் படாலியாவுக்கு 10 நாள்கள் பிணை வழங்கி உத்தரவிட்டார். யாகூப் தனது மனுவில் ஒரு மாதம் (30 நாள்கள்) பிணை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனாலும் அவருக்கு 10 நாள்கள் மட்டுமே பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஃபரூக் பனாவுக்கு 15 நாள்கள் நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது.

இதற்கு முன்னர், யாகூப் படாலியாவுக்கு இருமுறை பிணை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ”பிரதமர் பதவி தேடி வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்தவர் ராகுல் காந்தி!”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.