மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ருச்சிகா தியோகர், பிரதமேஷ். இவர்களது திருமணம் கடந்த மே 19 ஆம் தேதி வாட்கான் ஆனந்த் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், 150 விருந்தினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஆனால், இந்நிகழ்வில் ஊரடங்கின்போது கடைப்பிடிக்க வேண்டிய எந்த விதிகளையும் கடைப்பிடிக்கவில்லை என புகார்கள் வந்தன. அதனடிப்படையில், காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், திருமண நிகழ்வில் ஊரடங்கின்போது பின்பற்ற வேண்டிய முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமி நாசினி வழங்குதல் உள்ளிட்டவை பின்பற்றப்படவில்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அரசு வீதிகளை மீறியதாக மணமகன், மணமகளின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:சைபர் தாக்குதல்கள் 37 விழுக்காடு அதிகரிப்பு - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்